Amazon Search

பாத ஆணி - சேற்றுப்புண் - எளிய வழிகள்

“நாலு அடி எடுத்துவைப்பதற்குள் நாக்குத் தள்ளுது” என்று, நடக்கும்போது சிலர் வலியால் புலம்புவார்கள். பாதங்களைப் பதம் பார்க்கும் சேற்றுப்புண், பித்த வெடிப்பு, தோல் உரிதல், ஆணி ஆகியவைதான் வலிக்குக் காரணங்கள். இவற்றிலிருந்து மீள எளிய வழிகள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றன.
பித்த வெடிப்பு
உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று உயிர்த் தாதுக்கள் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய்கள் ஏற்படலாம். பித்தம் அதிகமானால் ஏற்படக்கூடிய நோய்களில் பித்தவெடிப்பும் ஒன்று. பாத ஓரத்தில் அழுக்குகள், கிருமித் தொற்று நீடித்தால், பித்த மிகுதியும் சேர்ந்துகொண்டு, வெடிப்புகளை ஏற்படுத்தும். இதனால், நீர் மற்றும் சீழ் வடிதல், புண், வலி ஏற்படும். பித்தவெடிப்பைத் தவிர்க்க, குளிக்கும்போதும், இரவு தூங்கப் போவதற்கு முன்பும், பாத ஓரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி, சுத்தமாகக் கழுவித் துடைக்க வேண்டும். பாதத்தில் விளக்கெண்ணெய் தேய்த்துவர, பித்த வெடிப்பு குறையும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். குங்குலிய வெண்ணெயைப் பாதங்களுக்குத் தடவிவர, மிக விரைவில் பித்த வெடிப்பு குறையும். கிளிஞ்சல் மெழுகை விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் குழப்பி, வெடிப்புகளில் தடவலாம். சீழ், புண் இருந்தால், அதற்கு அமிர்த வெண்ணெய் பலனளிக்கும்.
பாத ஆணி
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் சரிவர வெளியேறாதபோது, அவை பாதங்களில் திரண்டு நிற்கும். உடலின் எடை அதிகரிக்கும் போதோ, கடினமான தரைகளில் அழுத்தம் கொடுத்து நடக்கும்போதோ, அவை ஆணியாக மாறும். எலுமிச்சைப் பழத்தைத் தேய்ப்பதன் மூலம், பாதத்தில் உள்ள அழுக்கினை நீக்கலாம். முடிந்தவரை, கடினமானத் தரைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி, புல் தரையில் நடப்பது நல்லது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மருதாணி அரைத்துப் பூச, தோலின் கடினத்தன்மை குறையும். பப்பாளிப்பழக் கூழ், பாதத்தை மென்மையாக்கும்.
சேற்றுப்புண்
மண், சேறு சகதியில் உள்ள பாக்டீரியா, நுண்கிருமிகள், பாத விரல்களின் இடுக்குகளில் தங்கும்போது, அவை, வியர்வையில் வளரத்தொடங்கும். பாதங்களைச் சரியாக சுத்தப்படுத்தாமல் போகும்போது, சேற்றுப்புண் வரும். அதிக நேரம் நீரில் கால் வைத்திருந்தாலும், சேற்றுப்புண் ஏற்படலாம். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் குழைத்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது. கால்களில் சேற்றுப்புண் வந்தால், படிகார நீரைப் பயன்படுத்தி, பாதத்தைச் சுத்தப்படுத்திவிட்டு, புங்கன் தைலம் வாங்கித் தடவலாம். விரைவில் புண் ஆறும்.
தோல் உரிதல்
தோலின் வளர்ச்சி, காலநிலை மாற்றம், வைட்டமின் ஈ குறைபாடு காரணமாகச் சிலருக்குத் தோல் உரிதல் அதிகமாக இருக்கும். உணவில் தினம் ஒரு கீரை, காய்கறிகள் எடுத்துக்கொள்வது, வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இதனைக் குறைக்கலாம். மேலும், குளிக்கும்போது ஒரு காலை மற்றொரு பாதத்தால் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால், காலில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி, ஊட்டத்தை அளிக்கும்.
குதிகால் வாதம்
நன்றாகப் பாதங்களை ஊன்றி நடக்கவில்லை என்றாலோ, அதிக உயரமான செருப்பை அணிந்து நடந்தாலோ குதிகாலில் உள்ள எலும்புகள் கீழ் நோக்கி வளரும். இதனால், பாதங்களைக் கீழே ஊன்ற முடியாத அளவுக்குக் குதிகாலில் வலி ஏற்படும். இதற்கு, நன்றாகப் பழுத்த எருக்கு இலைகளை எண்ணெயில் காய்ச்சி, அதை ஒரு துணியில் நனைத்து, பாதத்தில் வைத்தால், வலி குறையும். கடைகளில் கிடைக்கும் மயனத் தைலத்தை சூடுபடுத்தி, குதிகாலில் தடவிவரலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு
பாதங்களில் ஏற்படும் புண்கள் ஆற, அங்கு ரத்த ஓட்டம் சீராக அமைந்து, புதிய ரத்தம் வந்துகொண்டே இருக்கவேண்டும். ஆனால், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாதம் வரைக்கும், தேவையான ஊட்டச்சத்துச் சுழற்சி வராமல் போகும். இதனால், அவர்களின் பாதங்களில் ஏற்படும் புண் விரைவில் ஆறாது. சுழற்சியை அதிகப்படுத்த, நரம்பினை உரமாக்கக்கூடிய மூலிகைகளை எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் வெந்நீரையும், மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரையும் எடுத்துக்கொண்டு, கால்களை மாற்றி மாற்றி அதில் நனைத்தால், ரத்த ஓட்டம் சீராகும்.
- See more at: http://tamilseithy.net/46522#sthash.oudPqVEn.dpuf

சர்க்கரை நோயாளிகளுக்கு: