செய்முறை:
விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும்.
இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல் வைக்கவும். இடது கை இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதி நிலையில் சாதாரண சுவாசம் மேற்கொண்டு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு மறுபக்கமும் இதே போல் செய்யவும். இதே போல் இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: 1. வயிற்றுத் தசைகள் பலம்பெறும். 2. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. 3. கை, கால் வலுப்பெரும்.