Amazon Search

பகீரதாசனம் - கால்கள் வலுவடையும்


செய்முறை :

விரிப்பில் மேல் நின்று இருகால்களிலும் சமமாக இருக்கும்படி இருகால்களையும் ஒன்றாக வைத்துக்கொள்ளவும். பார்வை நேராக இருக்கட்டும். கைகள் உடலை ஒட்டி வைக்கவும். இந்த நிலையிலிருந்து ஒரு காலை மடித்து, குதிகாலை இரு தொடைகளுக்கு இடையில் மேல்பகுதியில் வைக்கவும். பாதம் ஒரு பக்கத்தொடையில் நன்கு அழுத்தமாகப் பதிந்திருக்கும்.

நிலையைச் சரிசெய்துகொண்டபின், மூச்சை உள்ளிழுத்தவாறு இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி கும்பிட்ட நிலையில் வைக்கவும். முழு எடையும் ஒருகால் விரல்களில் இருக்கும். மூச்சை வெளியேவிட்டுக்கொண்டே கைகளையும், குதிகாலையும் கீழிறக்கி பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு ஒவ்வொரு பக்கமும் ஆறு முறை செய்யவேண்டும். ஆரம்பத்தில் ஒற்றை காலில் நிற்பது சற்று கடினமாக இருக்கும். அப்போது சுவற்றை பிடித்து கொண்டு நின்று பழகிய பின்னர் இந்த ஆசனத்தை செய்யலாம்.

பலன்கள்: கால்கள் வலுவடையும். கணுக்கால், கெண்டைச் சதைகள் நன்கு பலம் பெறும். மனம் ஒருநிலைபட உதவும். கவனம் அதிகரிக்கும்.